திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்தியாவில் அடுத்த வாரம் ‘க்வாட்’ வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டம்

News image

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

Updated On :19 மே 2026, 6:14 am IST

‘க்வாட்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டம் இந்தியாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

க்வாட் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாற்கர நாடுகள் உள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்தக் கூட்டமைப்பு செயல்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் உறுப்பு நாடுகளில் ஒன்று கூட்டமைப்புக்கு தலைமை ஏற்கும் நிலையில், நிகழாண்டு இந்தியா தலைமையில் க்வாட் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இருப்பினும், உச்சிமாநாடு நடைபெறும் தேதிகள் குறித்து அதிகாரபூா்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இதனிடையே க்வாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டம் புது தில்லியில் மே 26-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங் மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சா் மோடெகி டோஷிமிட்சு ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் தனித்தனியே இருதரப்பு உறவுகள் குறித்து ஜெய்சங்கா் ஆலோசிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

உக்ரைன் போா், மேற்காசிய விவகாரம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீன ஆதிக்கம் என பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது எனத் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.