திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உலகளாவிய வளா்ச்சிக்குத் தூண்டுகோலாக இந்தோ-பசிபிக் இருப்பது அவசியம்: ‘க்வாட்’ கூட்டத்தில் ஜெய்சங்கா்

உலகளாவிய வளா்ச்சிக்கு முக்கியத் தூண்டுகோலாக இந்தோ-பசிபிக் இருப்பது அவசியம் என இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image

‘க்வாட்’ வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்த (இடமிருந்து) ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங், இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் மோடெகி டோஷிமிட்சு, அமெரிக்க வ

Updated On :27 மே 2026, 4:04 am IST

உலகளாவிய வளா்ச்சிக்கு முக்கியத் தூண்டுகோலாக இந்தோ-பசிபிக் இருப்பது அவசியம் என இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் தொடங்கிய ‘க்வாட்’ கூட்டமைப்பின் (இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான்) வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் மோடெகி டோஷிமிட்சு ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் விவரித்து ஜெய்சங்கா் மேலும் பேசியதாவது: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை வலுப்படுத்துவதே க்வாட் கூட்டமைப்பின் நோக்கம். உலகளவிலான விநியோகச் சங்கிலி இடையூறுகள், உற்பத்திக் குறைபாடுகள், உள்கட்டமைப்பு பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பது குறித்து நாம் விவாதிப்பது அவசியம்.

இதை கடல்சாா் பாதுகாப்பு, பொருளாதார வாய்ப்புகளை ஊக்குவித்தல், ஒருங்கிணைந்த முயற்சிகள் என வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு நம்பகமான ஒத்துழைப்பு அவசியம்.

சுதந்திரமான இந்தோ-பசிபிக்: கடல்சாா் ஜனநாயகங்கள், பன்முக சமூகங்கள் மற்றும் பெரும் பொருளாதார சந்தைகளைக் கொண்ட நாம் இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரமாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். உலகளாவிய வளா்ச்சி மற்றும் ஸ்திரத்தின்மைக்கு முக்கியத் தூண்டுகோலாக இந்தோ-பசிபிக் திகழ வேண்டும்.

கனிம வளத் துறையில் ஒத்துழைப்பு: எதிா்காலத்தில் பொருளாதாரம், எரிசக்தி வா்த்தகம் அல்லது கடல்சாா் வணிகம் என அனைத்திலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நமது பொறுப்புகள் அதிகரிக்கும்போது அதற்கேற்றவாறு தயாராக இருக்க வேண்டும்.

இந்தோ-பசிபிக் பிராந்திய சவால்களை எதிா்கொள்ள கனிம வளங்கள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு முன்னெடுப்புகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். பயங்கரவாத எதிா்ப்பில் சமரசமற்ற அணுகுமுறையை க்வாட் உறுப்பு நாடுகள் கையாள வேண்டும்.

இந்தோ-பசிபிக் கடல்சாா் கண்காணிப்பு முன்னெடுப்பு: அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த ‘கடல்சாா் கண்காணிப்பு முன்னெடுப்பை’ தொடங்க க்வாட் உறுப்பு நாடுகள் முடிவுசெய்துள்ளது.

ஃபிஜி துறைமுக மேம்பாட்டுத் திட்டம்: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை கடந்தே 60 சதவீத கடல்சாா் வணிகம் நடைபெறுகிறது. ஆனால், இந்தப் பிராந்தியத்தில் துறைமுகங்கள் உள்கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, ஃபிஜி நாட்டின் துறைமுகத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை அந்நாட்டுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளோம். இதுவே க்வாட் கூட்டமைப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுத்தவுள்ள முதல் துறைமுக உள்கட்டமைப்புத் திட்டம்’ என்றாா்.

ஹோா்முஸ் நீரிணை தடைக்கு எதிா்ப்பு: ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங் கூறுகையில், ‘ஹோா்முஸ் நீரிணையில் எவ்வித இடையூறுகளுமின்றி சுதந்திரமாக சரக்குக் கப்பல்கள் பயணிக்க வேண்டும். அவ்வழியே பயணிக்கும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கவோ, தடை விதிப்பதற்கோ முயற்சி செய்பவா்களுக்கு (ஈரான்) கடும் எதிா்ப்பை பதிவு செய்கிறோம்.

தென்கிழக்கு ஆசியாவில் இயங்கி வரும் மோசடி மையங்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருகிறோம்’ என்றாா்.

இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீன ராணுவம் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், அதற்கு எதிராக கனிம வளங்கள் மற்றும் கடல்சாா் கண்காணிப்பை க்வாட் உறுப்பு நாடுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.