திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்தியா

இன்றைய செய்திகள் - நேரலை!

தமிழ்நாடு, இந்தியா உலகளவில் நடக்கும் இன்றைய செய்திகள் நேரலையாக வழங்கப்படும்.

இன்றைய செய்திகள் - நேரலை!

இன்றைய செய்திகள் - பிடிஐ

9:35 am, 18 மே 2026

காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் அமைந்துள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்குள் புகுந்த திருடன் அங்கிருந்து ...

9:35 am, 18 மே 2026

கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?

கேரள முதல்வராக வி.டி. சதீசன் இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புக் காரணங்களை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பங்கேற்கவில்லை...

9:35 am, 18 மே 2026

சிறுவனை அடித்துக் கொன்று குழிதோண்டிப் புதைத்த பள்ளி மாணவர்கள் 2 பேர் கைது!

கோவை: கோவை மாவட்டம் இருகூர் பகுதியில், கால்வாயில் மீன்பிடிக்கச் சென்ற 13 வயது பள்ளி மாணவனை அடித்துக் கொன்று குழிதோண்டிப் புதைத்த சம்பவத்தில்

10:01 am, 18 மே 2026

10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? எப்படி அறிவது?

தமிழ்நாட்டில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் படித்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள்...

10:02 am, 18 மே 2026

பெங்களூருக்கு புதிய விரைவு ரயில்! கட்டணம், வழித்தடம், முழு விவரம்

பெங்களூரிலிருந்து மும்பை வழித்தடத்தில் அவ்வப்போது சென்று வரும் மக்களுக்கு இனிப்பான செய்தியாக, புதிய விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

10:03 am, 18 மே 2026

மின் கட்டணம் செலுத்தும் முறையில் அதிரடி மாற்றம்! யாருக்குப் பொருந்தும்?

மின் நுகா்வோா் தங்களுக்கான மின் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்துவது மேலும் மேம்படுத்தப்பட்டு, தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியிருக்கிறது.

10:05 am, 18 மே 2026

6 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!

நாளை(மே 18) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10:24 am, 18 மே 2026

இபிஎஸ் தலைமையில் மாவட்டச் செயலர்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் நாளை(மே 19) காலை 9 மணிக்கு நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

10:29 am, 18 மே 2026

எஸ்பிஐ வங்கிக்கு தொடர்ச்சியாக 6 நாள் விடுமுறை?

10:40 am, 18 மே 2026

உ.பி. சாலை விபத்து: பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் - பிரதமர்

உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி நிவாரணத்தொகையையும் அறிவித்தார்.

11:17 am, 18 மே 2026

ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தெம்மாங்கு பாடகர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

11:40 am, 18 மே 2026

மகளிருக்கு இலவசப் பேருந்து; பதவியேற்ற முதல் நாளிலேயே 3 திட்டங்கள் அறிவிப்பு!

கேரள முதல்வர் வி.டி. சதீசன் பதவியேற்ற முதல் நாளிலேயே மூன்று முக்கியத் திட்டங்களை அறிவித்துள்ளார்.

12:28 pm, 18 மே 2026

ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!

தமிழகத்தில் 17 ஐஏஎஸ் உயர் அதிகாரிகள் இன்று(மே 18) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

12:53 pm, 18 மே 2026

நீட் வினாத்தாள் கசிவு: மேலும் ஒரு பேராசிரியர் கைது!

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மற்றொரு முக்கியக் குற்றவாளியான, மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் உள்ள ஆர்.சி.சி. பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளரும் பேராசிரியருமான சிவராஜ் மோட்டேகான்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1:14 pm, 18 மே 2026

ஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு!

ஈரான் எண்ணெய் மீதான வரிக்கு தற்காலிக விலக்கு அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1:21 pm, 18 மே 2026

முதல்வர் விஜய் பதிவு

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!

1:42 pm, 18 மே 2026

அதிமுகவை முதுகில் குத்தியது தவெக!

குதிரை பேரம் நடத்தி முதுகில் குத்திவிட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது.

அதேநேரம், தூய சக்தி, துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தி உள்ளது

2:11 pm, 18 மே 2026

அரசுப் பணியாளர்களுக்கான உச்ச வயது வரம்பு உயர்வு!

மேற்கு வங்கத்தில் அரசுப் பணியாளர்களுக்கான உச்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்படுவதாக அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

3:15 pm, 18 மே 2026

50 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வாங்கிய நிலம்! நெடுஞ்சாலை அறிவிப்பால் 11 மடங்கு விலை உயரவு!

மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 2022 ஆம் ஆண்டு வாங்கிய நிலம், நெடுஞ்சாலைத் திட்ட அறிவிப்பால் 2 ஆண்டுகள் கழித்து 11 மடங்கு விலை உயர்ந்துள்ளது.

போபால் அருகே உள்ள விவசாய நிலத்தில் ரூ. 5.5 கோடிக்கு அவர்கள் முதலீடு செய்த நிலையில், தற்போது 11 மடங்கு அதிகரித்து அதன் தற்போதைய மதிப்பு ரூ. 60 கோடியாக அதிகரித்துள்ளது.

4:37 pm, 18 மே 2026

திரைத் துறை கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி!

திரைத் துறை கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் சி. ஜோசப் விஜய் உறுதி அளித்துள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இன்று சட்டப்பேரவைக்குச் சென்று, திரைத் துறையில் இருந்து முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். இத்துடன் திரைத் துறையின் கோரிக்கைகளையும் மனுவாக முதல்வர் விஜய்யிடம் வழங்கினர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட விஜய், அதனைப் படித்துப் பார்த்து கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக உறுதி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.