சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் அமைந்துள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்குள் புகுந்த திருடன் அங்கிருந்து தண்ணீர் குழாய்களைத் திருடிக்கொண்டு, ஐ லவ் யூ அம்பிகாபூர் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காங்கிரஸ் அலுவலகத்தில் உறுப்பினர்கள் அறை, கழிப்பறைகளில் இருந்து இரும்புக் குழாய்கள், மற்றும் சில பொருள்களைத் திருடிச் சென்ற திருடன், காவல்துறையினருக்கு சவால் விடுக்கும் வகையில் கைப்பட ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அம்பிகாபூரில் அமைந்துள்ள ராஜீவ் பவன் காங்கிரஸ் அலுவலகத்தில் இது மூன்றாவது திருட்டு சம்பவம் என்றும், இதற்கு முன்பு சிறு சிறு திருட்டுகள் நடந்திருப்பதாகவும், தற்போது திருடர்கள் கடிதம் எழுதிவிட்டுச் சென்றதால் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த காங்கிரஸ் கட்சியினர், திருடன் காங்கிரஸ் அலுவலகத்துக்குள் வந்து பொறுமையாக ஒவ்வொரு குழாய்களையும் கழற்றியிருக்கிறான். அவன் எந்த பதற்றமும் இல்லாமல் சாவகாசமாக இதனைச் செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
திருடர்கள் இவ்வாறு கடிதம் எழுதிவிட்டுச் செல்வது மிகவும் அரிதான சம்பவம் என்பதால், இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
காங்கிரஸ் அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் இயங்கவில்லை என்பதால், குற்றவாளியை கண்டுபிடிப்பது காவல்துறைக்கு சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.
Summary
The thief had written "I love you" in the Congress office!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









