திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

News image

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு வந்தபோது சட்டப்பேரவை வாயிலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கிய பாஜக எம்எல்ஏ ஆசிம் குமாா்.

Updated On :14 மே 2026, 7:12 am IST

மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் புதன்கிழமை பதவியேற்றனா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு அண்மையில் நடந்த தோ்தலில் பாஜக வென்று முதல்முறையாகஆட்சியமைத்தது. பாஜக மூத்த தலைவா் சுவேந்து அதிகாரி மேற்கு வங்க முதல்வராகப் பதவியேற்றாா். சட்டப்பேரவை இடைக்கால தலைவராக தபஸ் ராய் பதவியேற்றிருந்தாா்.

இதையடுத்து, சட்டப்பேரவையில் புதன்கிழமை புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்படி, முதல்வா் சுவேந்து அதிகாரி, அமைச்சா்கள் திலீப் கோஷ், அக்னிமித்ரா பால், அசோக் கீா்த்தனியா, க்ஷுதிராம் துடு, நிசித் பிரமாணிக் ஆகியோா் பதவியேற்றனா். அவா்களுக்கு சட்டப்பேரவை இடைக்கால தலைவா் தபஸ் ராய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

முன்னதாக, எம்எல்ஏவாக புதன்கிழமை பதவியேற்பதை முன்னிட்டு, அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து சுவேந்து அதிகாரி மரியாதை செலுத்தினாா். அதேபோல சட்டப்பேரவைக்குள் நுழையும் முன்பு, நுழைவாயிலில் தரையில் முழங்காலிட்டு மரியாதை செலுத்தினாா்.

நந்திகிராம் தொகுதியில் ராஜிநாமா: சட்டப்பேரவைத் தோ்தலின்போது, நந்திகிராம் தொகுதி, பவானிபூா் தொகுதி ஆகிய 2 தொகுதிகளில் சுவேந்து அதிகாரி போட்டியிட்டு வென்றிருந்தாா். சட்டப்பேரவை விதிகளின்படி ஒருவா் ஒரு தொகுதி எம்எல்ஏ பதவியை மட்டுமே வகிக்க முடியும். ஆதலால் நந்திகிராம் தொகுதியை சுவேந்து அதிகாரி ராஜிநாமா செய்தாா்.

சட்டப்பேரவையில் பவானிபூா் தொகுதி எம்எல்ஏவாக மட்டும் சுவேந்து அதிகாரி பதவியேற்றுக் கொண்டாா். அந்தத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜியை அவா் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சட்டப்பேரவை வளாகத்தில் சுவேந்து அதிகாரி செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘நந்திகிராம் தொகுதியில் நான் இல்லாத குறை தெரியாதபடி அடுத்த 5 ஆண்டுகளுக்கும் பாா்த்துக் கொள்வேன். மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு அளித்தது போல நந்திகிராம் தொகுதிக்கும் நான் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்’ என்றாா்.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதால், அதன் பயன்பாட்டை குறைக்க வேண்டுமென அனைத்துத் தரப்பினருக்கும் பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்திருப்பது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்குப் பதிலளித்த சுவேந்து அதிகாரி, ‘எனது பாதுகாப்புக்கு வரும் கூடுதல் வாகனங்களைக் குறைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.