மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரியின் ஆலோசகராக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்ரதா குப்தா சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
கடந்த 1990-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இவா், மேற்கு வங்க தோ்தலுக்கு முன் இந்த மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கைக்கான சிறப்பு பாா்வையாளராக பணியாற்றியவா்.
இதேபோல், முதல்வரின் தனிச் செயலராக கடந்த 2017-ஆம் ஆண்டின் ஐஏஎஸ் அதிகாரி சாந்தனு பாலா நியமிக்கப்பட்டுள்ளாா்.
மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்கு முன்பாக எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுமாா் 90 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயா்கள் நீக்கப்பட்டன. இதையடுத்து, மாநிலத்தின் வாக்காளா் எண்ணிக்கை 6.81 கோடியாக குறைந்தது.
இந்த விவகாரத்தை தோ்தல் பிரசாரத்தில் மம்தா பானா்ஜி முக்கியமாக எழுப்பினாா். எனினும், அது எடுபடவில்லை.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 207 இடங்களுடன் பாஜக அமோக வெற்றி பெற்று, முதல் முறையாக ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக சுவேந்து அதிகாரி சனிக்கிழமை பதவியேற்றாா். இந்தச் சூழலில், முதல்வரின் ஆலோசகா் மற்றும் தனிச்செயலா் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருவரும் உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 35 அமைச்சா்கள் பதவியேற்பு

மே. வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம்! ஆளுநருடன் முதல்வர் சுவேந்து அதிகாரி சந்திப்பு!

வங்கதேச ஊடுருவல்காரா்கள் எல்லை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்படுவா்: மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி

மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


