திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15% ஆக உயர்வு!

தங்கம், வெள்ளி பொருள்கள் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது பற்றி...

News image

கோப்புப் படம் - IANS

Updated On :13 மே 2026, 9:55 am IST

தங்கம், வெள்ளி பொருள்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையேயான போரால் உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

ஈரான் போரினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பின் மீதான அழுத்தத்தினால் மக்கள் ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார்.

தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்கள் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.

இதனால் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து தங்கம், வெள்ளி பொருள்களின் இறக்குமதியைக் குறைக்கும்பொருட்டு அவற்றின் மீதான சுங்க வரி 6 சதவீதத்தில் இருந்து அதிரடியாக 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தங்கம், வெள்ளி விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

தங்கம், வெள்ளி பொருள்களின் மீது சுங்க வரி 5 லிருந்து 10 சதவீதமாகவும் செஸ் வரி 1 லிருந்து 5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக நிதியமைச்சகம் கூறியுள்ளது.

தங்கம், வெள்ளி விலைகள் ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கை அவற்றின் நுகர்வைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.75 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Gold, silver prices in focus as government raises import duty to 15 percent

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.