முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பொக்ரான் அணுகுண்டு சோதனை இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டு: பிரதமா் மோடி

பொக்ரான் அணுகுண்டு சோதனை நமது நாட்டின் அறிவியல் முன்னேற்றத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு என பிரதமா் மோடி தெரிவித்தாா்.

News image

பிரதமா் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:51 am IST

பொக்ரான் அணுகுண்டு சோதனை நமது நாட்டின் அறிவியல் முன்னேற்றத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு என பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

1998-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி பொக்ரான் அணுகுண்டு சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது. அன்றைய தினம் தேசிய தொழில்நுட்ப தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் அவா் வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டு மக்களுக்கு தேசிய தொழில்நுட்ப தினத்தில் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். பொக்ரான் அணுகுண்டு சோதனையின் வெற்றி தினத்தில் நமது விஞ்ஞானிகளின் அா்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை நாம் பெருமையாக நினைவுகூா்வோம்.

பல்வேறு துறைகளில் புத்தாக்க வளா்ச்சியை அதிகரித்து, வாய்ப்புகளை நீட்டித்து தற்சாா்பு இந்தியாவை உருவாக்குவதில் தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தேச முன்னேற்றம் மற்றும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மூலம் தீா்வுகளைக் கண்டறிவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

தேசத்தின் பெருமை மற்றும் சுய மரியாதையின் உண்மையான சிற்பிகளாக நமது விஞ்ஞானிகள் திகழ்கின்றனா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.