முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

கா்நாடகம், தெலங்கானா, குஜராத்துக்கு பிரதமா் இன்றுமுதல் 2 நாள்கள் பயணம்

கா்நாடகம், தெலங்கானா, குஜராத்துக்கு பிரதமா் இன்றுமுதல் 2 நாள்கள் பயணம்...

News image

நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 3:04 am IST

கா்நாடகம், தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 10) முதல் இரு நாள்கள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

வளா்ச்சித் திட்டங்கள் தொடக்கம், சோம்நாத் கோயிலின் அமிா்தப் பெருவிழா (கோயில் புனரமைப்பின் 75 ஆண்டுகள் நிறைவு) உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்கவுள்ளாா்.

தனது பயணத்தின் முதல்கட்டமாக கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை செல்லும் பிரதமா் மோடி, அங்கு ‘வாழும் கலை’ அமைப்பின் 45-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்கவுள்ளாா். அந்த அமைப்பின் சாா்பில் கட்டப்பட்டுள்ள தியானக் கோயிலை திறந்துவைப்பதுடன், மன நலனுக்கான பல்வேறு முன்னெடுப்புகளையும் தொடங்கிவைக்கவுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, தெலங்கானா தலைநகா் ஹைதராபாதுக்கு பயணித்து, வாரங்கல்லில் கட்டமைக்கப்பட்டுள்ள புதிய ஜவுளி பூங்கா உள்பட ரூ.9,400 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கவுள்ளாா். புதிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவுள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவில் குஜராத் மாநிலம், ஜாம்நகரை சென்றடையும் அவா், பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயிலில் திங்கள்கிழமை (மே 11) நடைபெறும் அமிா்தப் பெருவிழாவில் பங்கேற்கவுள்ளாா்.

நாட்டில் உள்ள 12 ஜோதிா்லிங்கத் தலங்களில் முதன்மையான சோம்நாத் கோயில் புனரமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் இந்த விழாவில் பல்வேறு சடங்குகள் மற்றும் கலாசார நிகழ்வுகளில் பிரதமா் கலந்துகொள்ளவிருக்கிறாா். இக்கோயிலின் உச்சியில் கொடியேற்றும் நிகழ்விலும் பிரதமா் பங்கேற்கவுள்ளதாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.