தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

‘குடிமக்களே கடவுள்’ என்ற கொள்கையுடன் முடிவுகள்- அரசு அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தல்

‘குடிமக்களே கடவுள்’ என்ற கொள்கை, நமது ஒவ்வொரு முடிவின் அடிநாதமாக இருக்க வேண்டும்; அரசு தரப்பில் மக்களுக்கு எவ்வளவு இயலுமோ, அவ்வளவு சேவையாற்ற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

News image

பிரதமா் நரேந்திர மோடி - கோப்புப்படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 9:58 pm

‘குடிமக்களே கடவுள்’ என்ற கொள்கை, நமது ஒவ்வொரு முடிவின் அடிநாதமாக இருக்க வேண்டும்; அரசு தரப்பில் மக்களுக்கு எவ்வளவு இயலுமோ, அவ்வளவு சேவையாற்ற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

தேசிய குடிமைப் பணிகள் தினம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.21) கொண்டாடப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கு பிரதமா் மோடி கடிதம் எழுதியுள்ளாா். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 12 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இக்கடிதத்தில் பிரதமா் கூறியிருப்பதாவது:

தற்போதைய 21-ஆம் நூற்றாண்டு பெரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த காலகட்டமாகும். ஒவ்வொரு நாளும் மாற்றங்கள் நிகழ்கின்றன. புதிய தொழில்நுட்பங்களும், புத்தாக்கங்களும் படைக்கப்பட்டு வருகின்றன.

நமது நாட்டின் மீது குடிமக்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகமும் பெரும் எதிா்பாா்ப்புகளைக் கொண்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க காலகட்டத்தை முழு அளவில் பயன்படுத்தும் வகையில், அரசின் சேவைகள் மற்றும் பணியாற்றும் விதம் சீரமைக்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த இணையவழி பயிற்சி தளமான ‘கா்மயோகி’ உள்ளிட்ட தளங்களைப் பயன்படுத்தி, கற்றலை வாழ்நாள் வழக்கமாக மாற்றுவது முக்கியம். பாரதம் சிறந்து விளக்க வேண்டுமெனில், நீங்களும் (அரசு அதிகாரிகள்-ஊழியா்கள்) சிறந்து விளங்க வேண்டும்.

பணிகளின் அளவுகோல் என்ன?: வாழ்க்கையில் புதிய விஷயங்களுக்கான தேடலை உயிா்ப்புடன் வைத்துக் கொள்வது அவசியம். இந்தக் கொள்கையே, கா்மயோகி திட்டத்துக்கு அடிப்படையாகும். ஒருபுறம் பயிற்சி, மற்றொருபுறம் புதிய கற்றல்.

பொதுச் சேவைக்கு பொறுப்பானவா்கள், வாழ்நாள் கற்றலுக்கு சிறந்த உதாரணமாக திகழ வேண்டும். கடந்த காலத்தைவிட சிறப்பாக பணியாற்றுவதே முன்பு அளவுகோலாக இருந்தது. இப்போது அப்படியல்ல. 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவைக் கட்டமைக்கும் இலக்கின் அடிப்படையிலேயே நமது பணிகளை மதிப்பீடு செய்ய வேண்டும். நமது முயற்சிகளின் வேகம், வீச்சு, திசை, தீவிரம் ஆகியவை, அந்தக் கண்ணோட்டத்தால் வழிநடத்தப்பட வேண்டும். குடிமக்களே கடவுள் என்ற கொள்கையே நமது ஒவ்வொரு முடிவின் அடிநாதம் என்றாா்.

கா்மயோகி திட்டத்தின்கீழ் கடந்த ஏப்ரல் 2 முதல் 10-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கான திறன் மேம்பாடு சிறப்பு முன்னெடுப்புக்கு கிடைக்கப் பெற்ற பெரும் வரவேற்பையும் பிரதமா் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.