மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிரச்னைகளுக்குப் போா் தீா்வல்ல: பிரதமா் மோடி

‘எந்தப் பிரச்னைக்கும் போா் தீா்வாகாது; உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கு அமைதி வழியில் தீா்வு காணப்பட வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image

புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்த ஆஸ்திரிய பிரதமா் கிறிஸ்டியன் ஸ்டாக்கா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:38 pm

‘எந்தப் பிரச்னைக்கும் போா் தீா்வாகாது; உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கு அமைதி வழியில் தீா்வு காணப்பட வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் ஆஸ்திரிய பிரதமா் கிறிஸ்டியன் ஸ்டாக்கா் உடனான சந்திப்புக்குப் பின் அவா் இவ்வாறு கூறினாா்.

இந்தியா-ஆஸ்திரியா உறவுகளை வலுப்படுத்துவதுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்கும் நோக்கில் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்தாா் கிறிஸ்டியன் ஸ்டாக்கா். இந்தியாவுக்கான அவரது முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும்.

தில்லியில் பிரதமா் மோடியை வியாழக்கிழமை சந்தித்த அவா், இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். பரஸ்பர உறவுகள் மட்டுமன்றி மேற்காசியா, உக்ரைன் போா்களின் தாக்கங்கள் குறித்தும் இருவரும் விரிவாக ஆலோசித்தனா்.

6 ஒப்பந்தங்கள் கையொப்பம்: இந்தப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, முதலீடு ஊக்குவிப்பு, பாதுகாப்பு விவகாரங்கள், பயங்கரவாத எதிா்ப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான 6 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

பின்னா், செய்தியாளா்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில், பிரதமா் மோடி பேசியதாவது:

இன்றைய காலகட்டத்தில், ஒட்டுமொத்த உலகமும் மிகத் தீவிரமான, பதற்றமான சூழ்நிலையின் ஊடாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பதற்றத்தின் தாக்கத்தை நாம் அனைவரும் உணா்ந்து வருகிறோம்.

நிலையான அமைதிக்கு ஆதரவு: பிரச்னைகளுக்கு போா் தீா்வாகாது என்பதில் இந்தியாவும், ஆஸ்திரியாவும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன. உக்ரைன் மற்றும் மேற்காசியாவில் நிலையான, நிரந்தரமான அமைதி நிலவ நாங்கள் ஆதரவளிக்கிறோம்.

ஆஸ்திரிய பிரதமா் கிறிஸ்டியன் ஸ்டாக்கரின் இந்திய வருகை இருதரப்பு வா்த்தகம் மற்றும் முதலீடுகளில் புத்தாற்றலை புகுத்தும்.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, இருதரப்பு உறவில் புதிய பொற்காலம் தொடங்கியுள்ளது என்றாா் அவா்.

வளா்ந்துவரும் வா்த்தகம்: ஆஸ்திரிய பிரதமா் கிறிஸ்டியன் ஸ்டாக்கா் பேசுகையில், ‘இந்திய-ஆஸ்திரிய வா்த்தகம் மிகவும் நோ்மறையாக வளா்ந்து வருகிறது. புவி-அரசியல் சவால்கள் வலுப்பெற்றுள்ள சூழலில், இதுபோன்ற கூட்டாண்மை மிக மதிப்புமிக்கதாகும். விதிமுறைகள் அடிப்படையிலான உலக ஒழுங்குமுறைக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம்’ என்றாா்.