ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கேரளத்தில் காங்கிரஸ் முதல்வர் யார்? வி.டி. சதீசனின் ஆதரவாளர்கள் போராட்டம்!

கேரளத்தில் வி.டி. சதீசனை முதல்வராக அறிவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் பேரணி...

 V.D. Satheesan

வி.டி. சதீசன் - ENS

Published On :8 மே 2026, 8:31 pm IST

கேரளத்தில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில் மூத்த தலைவர் வி.டி. சதீசனை முதல்வராக அறிவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா இடையே மும்முனைப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கே.சி. வேணுகோபாலுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கேரள தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக அதிகம் உழைத்த வி.டி. சதீசனை முதல்வராக்க வேண்டும் எனும் வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளுடன் இன்று (மே 8) அவரது ஆதரவாளர்கள் திரிச்சூர், கோழிக்கோடு, காசர்கோடு, இடுக்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் மற்றும் பேரணிகளில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, நிர்வாகிகளின் இந்தப் போராட்டங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், வி.டி. சதீசன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தப் போராட்டங்கள் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Summary

In Kerala, supporters of V D Satheesan have staged protests demanding that he be declared the Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.