ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கேரளத்தில் நிலச்சரிவு; எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயார்: வி.டி. சதீசன்

கேரளத்தில் கனமழையால் ஏற்படும் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயார் என அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளது பற்றி...

Chief Minister V. D. Satheesan

வி.டி. சதீசன் - கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 11:05 am IST

கேரளத்தில் கனமழையால் ஏற்படும் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயார் என அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் வடகிழக்குப் பருவமழை தாமதமாகத் தொடங்கியது. சில நாள்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து இடுக்கி, கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகமன், அடூர் மலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பணியில் ஈடுபட்டு, காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து வி.டி. சதீசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக வந்த தகவல்களின் அடிப்படையில் வருவாய்த்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.

பேரிடர் தடுப்புப் பணிகள், வருவாய்த்துறை அமைச்சர் அனில் குமார் தலைமையில் ஒருங்கிணைக்கப்படும். எந்தவொரு சூழ்நிலையையும் கையாள தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல்துறை ஆகியவை தயாராக உள்ளன.

காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும், மறுவாழ்வுப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அரசு முடிவு செய்துள்ளது என்று வி.டி. சதீசன் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Kerala Chief Minister V.D. Satheesan stated on Saturday (August 1) that the state is prepared to handle any situation arising from heavy rains.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.