ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க 13 இந்திய கப்பல்கள் காத்திருப்பதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 7) மாலை தெரிவித்துள்ளது.
புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் உடனான சந்திப்பில் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படுவது குறித்து ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“ஹோர்முஸ் நீரிணையை இதுவரை 11 இந்திய கப்பல்கள் கடந்துள்ளன. மேலும், பாரசீக வளைகுடா பகுதியில் காத்திருக்கும் 13 இந்திய கப்பல்கள் இந்தியா வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவுக்கு எதிரான போரில் சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கின. மேலும், பாகிஸ்தான் தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டு வந்தன.
ஆனால், தங்களின் அமைதி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை விலக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
External Affairs stated that 13 Indian ships are waiting to cross the Strait of Hormuz.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!

ஹோர்முஸ் நீரிணை எதிரிகளைத் தவிர அனைவருக்கும் திறப்பு! - தில்லியில் ஈரானிய அமைச்சர் பேச்சு!

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு








