மேற்கு வங்கத்தில் பாஜக 200க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில்,
இன்று மாலை 6 மணி நிலவரப்படி பாஜக 204 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. இவற்றில் 33 தொகுதிகளில் வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் 10 தொகுதிகளில் வெற்றி மற்றும் 73 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.
காங்கிரஸ் 2 இடங்களிலும் கம்யூனிஸ்ட் கூட்டணி 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
கடந்த தேர்தலில் 77 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் முதல்முறையாக ஆட்சியமைக்கிறது.
பவானிபூர் தொகுதியில் போட்டியிடும் மமதா பானர்ஜி முதலில் பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில் தற்போது 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து 4 ஆவது முறையாக ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மமதாவுக்கும் கட்சிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Summary
West Bengal Election Results 2026: BJP Crosses 200 Seats In Bengal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









