போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் மேல்தளம் இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அருகே உள்ள மருந்துக் கடையின் மேலே நான்கு அடுக்குக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அந்த கட்டடத்தின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் ஐந்து பேர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் நிலைமை ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மூன்று பேர் முதலுதவிக்குப் பிறகு வீடு திரும்பினர் என்று காவல் அதிகாரி அமித் சோனி தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் மருந்துகளை வாங்குவதற்காக அந்த கட்டடத்தின் கீழே கூடியிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
A slab of an under-construction building collapsed near AIIMS in Bhopal on Friday, injuring eight people, including a woman, standing below, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- 5 பேர் கைது

ம.பி.யில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; இடிபாடுகளுக்குள் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அச்சம்

அதிராம்பட்டினம் அருகே வீட்டின் சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு

பாகிஸ்தானில் அரசு கட்டடத்தின் மேற்கூரை இடிந்தது: 8 பெண்கள் பலி, 30 பேர் காயம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



