சண்டீகரில் உள்ள பஞ்சாப் மாநில பாஜக தலைமையகத்துக்கு வெளியே நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு கிரெனேட் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பலுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. போர்ச்சுகல் மற்றும் ஜெர்மனியில் உள்ள வெளிநாட்டு கையாட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்
சண்டீகரில் உள்ள பஞ்சாப் மாநில பாஜக தலைமையகத்துக்கு வெளியே புதன்கிழமை மாலை குண்டு ஒன்று வெடித்துச் சிதறியது. அதிருஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் அலுவலகத்தைக் குறிவைத்து நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
குண்டு வெடித்துச் சிதறியதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் சேதமடைந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) அங்கு ஆய்வு நடத்தியதுடன், விசாரணையையும் முன்னெடுத்துள்ளனா். மத்திய தடயவியல் துறையினரும் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்துள்ளனா்.
Summary
Five individuals have been arrested in connection with the blast incident that occurred outside the Punjab BJP headquarters in Chandigarh, said Punjab Director General of Police Gaurav Yadav on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய சாதனை!

லக்னௌவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- தேடப்படும் 2 சந்தேக நபர்கள்

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- யாருக்கும் காயமில்லை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



