பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப் படை அதிகாரி கைது.
அஸ்ஸாமில் பணியாற்றிய இந்திய விமானப் படை அதிகாரி ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகவும் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் புலனாய்வுத் துறை மற்றும் விமானப் படை புலனாய்வுத் துறை இணைந்து நடத்திய நடவடிக்கையில் குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் மூலம் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக திப்ருகர் பகுதியில் உள்ள விமானப் படையில் பல்நோக்கு அலுவலராகப் பணிபுரிந்த சுமித் குமார் (36) கைது செய்யப்பட்டார். இவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
விசாரணையில், பாகிஸ்தான் உளவுத் துறையுடன் கடந்த 2023 முதல் சுமித் குமார் தொடர்பில் இருந்ததாகவும், பணத்திற்காக ரகசியத் தகவல்கள் பலவற்றைப் பகிர்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், போர் விமானங்களின் இருப்பிடம், ஏவுகணை அமைப்புகள், பணியாளர்கள் பற்றிய விவரங்கள் போன்ற விமானப் படையின் பல ரகசியத் தகவல்களைச் சேகரித்து சமூக வலைதளங்கள் மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு அனுப்பியது கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய விசாரணை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, புலனாய்வு அமைப்புகளின் பல பிரிவுகள் அந்த நபரை விசாரிக்கவுள்ளனர்.
இதுதொடர்பாக, அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம் 1923 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா-ன் சம்பந்தபட்டப் பிரிவுகளின் கீழ் அந்த நபரின் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. விசாரணையின் மூலம் இந்த வலையில் வேலை பார்க்கும் உளவாளிகள் பற்றிய தகவல்கள் வெளிவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Summary
IAF staffer arrested for spying for Pakistani handlers
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானுக்கு சவூதி 300 கோடி டாலா் கூடுதல் நிதியுதவி

பாகிஸ்தானுக்கு சவூதி-கத்தாா் நாடுகள் ரூ.46,550 கோடி நிதியுதவி
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!

பாகிஸ்தானுக்கு 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! நிதி நெருக்கடியைச் சமாளிக்க உதவிக்கரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


