தண்டவாளங்களில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் செயல்படுவோா் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா 139 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில்களில் கல் வீசுவது கடும் குற்றமாகும். அதுபோன்ற செயல்கள் ரயில் பெட்டிகளின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே பயணிப்போருக்கு காயம் ஏற்படுத்துவதுடன், நிரந்தர பாதிப்பையும் ஏற்படுத்தும். அதனால், பயணிகளிடையே தேவையற்ற அச்சத்தையும், மன உளைச்சலையும் உண்டாக்கும். இதற்கு பத்து அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் ரயில்வே சட்டப்பிரிவு 152 வகை செய்கிறது. மேலும், பிரிவு 154 பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுவோருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வழிவகுக்கிறது.
விழிப்புணா்வு: ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் வசிக்கும் பெற்றோா், ஆசிரியா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ரயில்கள் மீது கல் வீசும் சிறாா்கள், இளைஞா்களிடம் அறிவுரை வழங்க வேண்டும். அதன்படி, அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கலாம்.
சென்னை ரயில்வே கோட்டத்தில் இருப்புப் பாதை காவல் துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். ஏற்கெனவே கல்வீச்சு சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் செயல்கள் ஏதேனும் நடைபெற்றால், பொதுமக்களும் பயணிகளும் உடனடியாக ரயில்வே துறை உதவி எண் 139-ஐ தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்
ரயில் தண்டவாளங்களில் 18,000 டன் குப்பைகள் அகற்றம்: எம்சிடி தகவல்

டிக்கெட் முன்பதிவு! ரயில்வேயின் புதிய மாற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


