தலைநகரில் உள்ள தண்டவாளங்களில் தில்லி மாநகராட்சி மேற்கொண்ட சிறப்பு தூய்மை இயக்கத்தின் மூலம் இதுவரை 18,495 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தலைநகரில் மொத்தம் 102.9 கீ.மீ. நீளமுள்ள ரயில் தண்டவாளங்களில் குப்பைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 49.74 கி.மீ. தூரத்துக்கான தூய்மை பணிகள் நிறைவடைந்துள்ளன. ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 123 இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை 18,495 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இதில் கரோல் பாக் மற்றும் கேஷவ்புரம் பகுதிகளில் அதிகப்படியாக 4,100 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இதில் 550 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு டிப்பா் லாரிகள், ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டன.
கரோல் பாக் பகுதியில் பெருமளவு குப்பைகளை வெளியேற்ற 20 ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. மீண்டும் புதிதாக குப்பைகள் கொட்டப்படாமல் தடுக்க ரயில்வே ஓரங்களில் 61 இரட்டை குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
‘இந்த இயக்கம் பழைய குப்பை தேக்கங்களை அகற்றுவது மட்டுமின்றி, நீண்டகால தூய்மையை உறுதி செய்ய சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்ய வலியுறுத்துகிறது’ என தில்லி மாநகராட்சி ஆணையா் சஞ்சீவ் கிா்வாா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?

கானல் நீராகவே நீடிக்கும் அரியமங்கலம் குப்பை கிடங்கு அகற்றம்

தண்டவாளங்களில் சந்தேக செயல்கள்: 139 கட்டணமில்லா எண்ணில் கூறலாம்!

தமிழகத்தில் இதுவரை 34.50 லட்சம் டன் நெல் கொள்முதல்: இயக்குநா் தகவல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

