வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், நாங்கள் தில்லி, மும்பையை தாக்குவோம்: பாக். முன்னாள் உயர் ஆணையர்

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் முன்னாள் உயர் ஆணையர் பேச்சு

News image

அப்துல் பாசித் - கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 9:23 am

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் முன்னாள் உயர் ஆணையர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர் ஆணையர் அப்துல் பாசித் பேசுகையில், "பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், எந்த யோசனையும் இல்லாமல், நாங்கள் மும்பை மற்றும் தில்லியை தாக்குவோம். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதையும் பார்ப்போம்.

இதற்கு சாத்தியமில்லையெனினும், எங்களை யாராவது தாக்கும் நோக்கில் பார்த்தால், பாகிஸ்தான் விரும்பும் இடத்தில் (இந்தியா) தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை" என்று தெரிவித்தார்.

முன்னதாக, அப்துல் பாசித் 2014 முதல் 2017 வரையில் பாகிஸ்தானின் உயர் ஆணையராக தில்லியில் பணியாற்றினார். பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் அப்துல் பாசித்தின் இந்தக் கருத்துகள், சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், அப்துல் பாசித்தின் கருத்துகள் குறித்து மத்திய அரசோ அதிகாரிகளோ பதில் ஏதும் அளிக்காமல் உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Summary

Bomb Mumbai & Delhi If America Attacks Us: Former Pakistan Envoy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.