ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டால் வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் 21 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
ஈரான் தரப்பில் 10 அம்ச திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடக் கூடாது, ஹோா்முஸ் நீரிணையை முழுமையாகக் கட்டுப்படுத்துவது கூடாது என அமெரிக்கா சில நிபந்தனைகளை விதித்தது. அதில், இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் வெளியிட்ட அறிக்கையில், “ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமன் கடற்பகுதியின் பாதுகாப்பு என்பது அனைவருக்குமானது அல்லது யாருக்கும் உரிமையில்லாதது என இஸ்லாமியக் குடியரசான ஈரானின் ஆயுதப் படைகள் தெளிவாகவும் உறுதியாகவும் அறிவிக்கின்றது.
ஈரான் எல்லைக்குள்பட்ட நீர்ப்பரப்பில் ஆயுதப் படைகளின் உறுதியான பாதுகாப்பு தொடரும். மேலும் பலமுறை எச்சரித்ததன்படி, எதிரி தரப்பு கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதியில்லை. எப்போதும் இருக்கப் போவதில்லை.
மற்ற கப்பல்கள் ஈரான் ஆயுதப் படைகளின் விதிமுறைகளுக்கு உள்பட்டு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
போர் முடிந்த பின்னரும் ஈரானின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக அமெரிக்கா நடந்துகொள்வதால், ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகளை ஈரான் உறுதியாகச் செயல்படுத்தும்.
சர்வதேச கடல் பகுதியில் கப்பல்களின் நடமாட்டத்திற்கு குற்றவாளி நாடான அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானது. அது கடற்கொள்ளைக்குச் சமமானது.
ஹோர்முஸ் நீரிணை பிரச்னையில் ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டால், வளைகுடா நாடுகளில் உள்ள துறைமுகங்களில் நாங்கள் தாக்குதல் நடத்துவோம்” என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
Summary
Iran has warned that if the United States blockades Iranian ports
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

போரை விரும்பும் வல்லரசுகள்!

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா, இஸ்ரேல் தவிர மற்றவர்கள் செல்லலாம்: ஈரான்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



