மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா, இஸ்ரேல் தவிர மற்றவர்கள் செல்லலாம்: ஈரான்

ஹோர்முஸ் நீரிணை வழியே அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டுக் கப்பல்கள் தவிர, மற்ற நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி

News image

ஹோர்முஸ் நீரிணை - கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 6:50 am

ஹோர்முஸ் நீரிணை வழியே அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டுக் கப்பல்கள் தவிர, மற்ற நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி என ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்கு மத்தியில் அந்நாட்டுக் கப்பல்கள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை வழியே அனுமதி இல்லை என ஈரான் அறிவித்துள்ளது.

மேலும், நீரிணை வழியே செல்வதற்கு மற்ற நாடுகளின் கப்பல்களுக்கு எந்தவித இடையூறும் இல்லை என்றும் ஈரான் கூறியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், இதன் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியுள்ளது.

இந்த வழித்தடத்தில்தான், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு என்றளவில் நடைபெறுகிறது.

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அறிவித்த நிலையில், அவ்வழியாக வர்த்தகம் நாடுகள் தங்களின் போர்க் கப்பல்களை அனுப்பி அமெரிக்காவுக்கு உதவ வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

Summary

Iran Says Strait Of Hormuz Open But Bars US, Israel-Linked Vessels

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.