ஈரான் போர் எதிரொலியாக பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடுவதாகவும் ஹவுதி அமைப்பினர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் நடத்தி வரும்நிலையில், ஈரானும் உரிய பதிலடி அளித்து வருகிறது. இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியதால், உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவிருப்பதாகவும் ஈரான் ஆதரவு யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போரிலிருந்து விலகியிருந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், தற்போது ஈரானுக்கு ஆதரவாக, எந்த நேரத்திலும் பாப் எல்-மண்டேப் நீரிணை மூடப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நீரிணை, செங்கடல் வழியாக சூயஸ் கால்வாயை அணுகும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்த வழித்தடமானது, ஆசிய - ஐரோப்பிய வர்த்தகத்துக்கு முக்கியமானது.
ஹோர்முஸ் மற்றும் பாப் எல்-மண்டேப் என இரு நீரிணைகள் மட்டுமே உலகளவில் கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 30 சதவிகித பங்களிக்கின்றன.
பாப் எல்-மண்டேப் நீரிணையை சௌதி அரேபியா மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தி வருவதால், இந்த நீரிணையும் மூடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Summary
Iran War: Houthis Threatens Passage of Oil Through the Red Sea's Bab el-Mandeb Strait
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் போர்: மக்கானா ஏற்றுமதி பாதிப்பு! ஒரு மாதத்தில் ரூ.500 கோடி இழப்பு!

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war

ஈரான் போர் எதிரொலியா? முட்டை விலை கடும் வீழ்ச்சி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


