வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால் இந்திய நகரங்களைத் தகா்க்க வேண்டும்: பாகிஸ்தான் முன்னாள் தூதா் சா்ச்சை பேச்சு!

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் முக்கிய நகரங்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்க வேண்டும் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதா் அப்துல் பஷீத் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image

இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதா் அப்துல் பஷீத்

Updated On :22 மார்ச் 2026, 6:55 pm

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் முக்கிய நகரங்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்க வேண்டும் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதா் அப்துல் பஷீத் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் உள்ளூா் தொலைக்காட்சியில் மேற்காசிய போா் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அப்துல் பஷீத், ‘ஈரானில் போா் தீவிரமாக தொடா்ந்தால் அங்கு இஸ்ரேல் வலுப்பெற்று பாகிஸ்தானை நெருங்கி வந்துவிடும். நமது அணுஆயுதங்களை அச்சுறுத்தலாகக் கருதி அதை அழிப்பதற்குக்கூட அமெரிக்கா முயற்சிக்கலாம்.

அமெரிக்கா பாகிஸ்தானை தாக்கினால், நாம் பதிலடி நடவடிக்கையாக இந்தியாவைத் தாக்க வேண்டும். நமது ஏவுகணைகள் அமெரிக்காவை எட்ட முடியாது. ஆனால், இந்தியாவில் தில்லி, மும்பை போன்ற நகரங்களை எந்த மாற்று யோசனையும் இல்லாமல் நாம் தாக்க முடியும். அமெரிக்கா மட்டுமல்ல வேறு எந்த நாடு நம்மைத் தாக்கினாலும், நாம் இந்தியாவைத் தாக்க வேண்டும். முதலில் அதை நிகழ்த்திவிட்டு பிறகு என்ன நடக்கும் என்று நாம் யோசிக்கலாம்.

பாகிஸ்தான் என்ற நாடு இந்தியாவுக்கு எப்போதும் அச்சுறுத்தல். ஆனால், இதுபோன்று தாக்குதல் நடத்தும் சூழல் எழக் கூடாது என்றே கருதுகிறேன். பாகிஸ்தானில் இருக்கும் ஒவ்வொருவரும் ஜிகாதிகள். இதை ஏற்காதவா்கள் பாகிஸ்தானியராக இருக்க முடியாது.

ஈரானில்கூட அணுஆயுத அழிப்பு என்றுதான் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் அண்டை நாடுகளைத்தான் தாக்கி வருகிறது. அதேபோல பாகிஸ்தான் மீது அமெரிக்கா ஏதாவது காரணம் கூறி தாக்குதல் நடத்தினால், நமது பதிலடி தாக்குதல் இந்தியா மீதுதான் இருக்க வேண்டும்’ என்றாா்.

அப்துல் பஷீத்தின் இந்தக் கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக இந்திய தரப்பில் உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அப்துல் பஷீத், கடந்த 2014 முதல் 2017 வரை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராகப் பணியாற்றியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.