இக்கட்டான போர்ச் சூழலில் முதலில் துணைநின்ற இந்தியாவை ஒருபோதும் மறக்க மாட்டோம் என ஐக்கிய அரபு அமீரக தூதர் அப்துல் நாசர் ஜமால் அல்ஷாலி தெரிவித்திருக்கிறார்.
கடந்த பிப். 28 முதல் ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இரு தரப்பும் பதில் தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதால், வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களும் பெரிதளவுல் பாதிப்படைகின்றனர்.
இதுகுறித்து, ஐக்கிய அரபு அமீரகத் தூதர் அப்துல் நாசர் ஜமால் அல்ஷாலி கூறுகையில் “மேற்கு ஆசியாவில் ஈரான் தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் நிலையிலும், வளைகுடா நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பே தனது முன்னுரிமை; அவர்கள் பாதுகாக்கப்பட்டு குடும்பத்தினரைப் போல நடத்தப்படுகிறார்கள்.
வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களைக் கண்டிக்கும் ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா முன்மொழிந்ததை வரவேற்கிறேன். இந்த இக்கட்டான போர்ச் சூழலில் முதலில் எங்களுடன் நின்றவர்களில் இந்தியாவும் ஒன்று என்பதை ஐக்கிய அரபு அமீரகம் எப்போதும் நினைவில் கொள்ளும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியக் குடிமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்நாட்டில் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழும் 200 நாடுகளைச் சேர்ந்தவர்களைப் போலவே, இந்தியர்களும் பாதுகாக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களைப் போலவே நடத்தப்படுகிறார்கள்” என்றும் தெரிவித்தார்.
Summary
UAE Ambassador Abdulnasser Alshali has said that the safety of Indians is a priority.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!

அபுதாபியில் ஈரான் மீண்டும் தாக்குதல்: ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியா்கள் காயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! 5 இந்தியர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


