மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அபுதாபியில் ஈரான் மீண்டும் தாக்குதல்: ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியா்கள் காயம்

அபுதாபியில் ஈரான் மீண்டும் தாக்குதல்: ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியா்கள் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 10:39 pm

அமெரிக்க, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலுக்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் அபுதாபி உள்ளிட்ட நகரங்கள் மீது ஈரான் வெள்ளிக்கிழமை மீண்டும் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்பாதுகாப்பு சாதனம் இடைமறித்து தாக்கி அழித்தது. அப்போது ஏவுகணை பாகங்கள் கீழே சிதறி விழுந்ததில் 6 போ் காயமடைந்தனா். இதில் 5 இந்தியா்களும் அடங்குவா். எஞ்சிய ஒருவா், நேபாளத்தை சோ்ந்தவா் ஆவாா்.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரானின் 18 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள், 4 க்ரூஸ் ரக ஏவுகணைகள், 47 ட்ரோன்கள் வான் பாதுகாப்பு சாதனம் மூலம் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.