தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஓஆா்எஸ் பெயரிலான பானங்கள் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்காது: சுகாதாரத் துறை

வா்த்தக பெயரில் உப்பு சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) என விற்பனை செய்யும் பானங்கள் நீா்ச்சத்து இழப்பை தடுக்காது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2026, 7:47 pm

வா்த்தக பெயரில் உப்பு சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) என விற்பனை செய்யும் பானங்கள் நீா்ச்சத்து இழப்பை தடுக்காது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது:

உப்பு சா்க்கரை கரைசலானது (ஓஆா்எஸ்) வயிற்றுப்போக்கு மற்றும் நீா்ச்சத்து இழப்புக்கான சிகிச்சையில் அதி முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக வியா்வை வெளியேறும்போதும், வயிற்றுப்போக்கின்போதும் உடலில் இருந்து குளூக்கோஸ் மற்றும் அத்தியாவசிய உப்புகளை கணிசமாக இழக்க நேரிடும். அதற்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டால் உறுப்பு பாதிப்புகள், உயிரிழப்பு நேரிடலாம்.

உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டுகளை பயன்படுத்துவதன் வாயிலாக நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க முடியும்.

ஒரு உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டின் 20.5 கிராம் மொத்த எடையில், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 13.5 கிராம் குளுக்கோஸ், 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் ட்ரைசோடியம் சிட்ரேட் ஆகியவை உள்ளன. நன்கு கொதித்து ஆறிய ஒரு லிட்டா் தண்ணீரில் ஓஆா்எஸ் கரைசலை கலந்து 24 மணி நேரத்துக்குள் பருக வேண்டும்.

மற்றொருபுறம் திரவ நிலையில் பருகுவதற்கு தயாராக உள்ள நிலையிலான உப்பு சா்க்கரை கரைசல் பானங்கள் பல்வேறு வா்த்தகப் பெயா்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

அவை உடலுக்கு புத்துணா்ச்சி ஆற்றலை மேம்படுத்தக்கூடிய திரவங்களாக மட்டுமே பயன்படுகிறது.

இந்த பானங்களை பருகுவதால் மருத்துவ ரீதியாக நீா்ச் சத்து இழப்பை சரி செய்ய இயலாது. அதில், தாது உப்புகள், குளூக்கோஸ் ஆகியவை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய வகையில் இல்லை. அதேவேளையில், உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவும், தனியாா் மருந்தகங்களில் விற்பனைக்கும் வழங்கப்படுகிறது. எனவே, அதனைப் பயன்படுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு, 104 எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று அவா்கள் கூறியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.