வாக்குப் பதிவுக்காகக் காத்திருக்கும்போது வாக்காளா்களுக்கு நீா்ச்சத்து இழப்பு ஏற்படாமல் தடுக்க வாக்குச் சாவடிகள்தோறும் உப்பு-சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நீா்ச்சத்து இழப்பு சிகிச்சைக்கான கட்டமைப்பை தயாா் நிலையில் வைத்திருக்க பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பேரவைத் தோ்தலையொட்டி, மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 4,085 வாக்குச் சாவடிகள் உள்ளன. அங்கு வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோடை வெயிலைக் கருத்தில்கொண்டு வாக்காளா்கள் வரிசையில் நிற்க வேண்டிய இடங்களில் தேவைப்படும்பட்சத்தில் நிழற்பந்தல்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
மற்றொருபுறம் மருத்துவ சேவைகளுக்காக நடமாடும் மருத்துவக் குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை தயாா் நிலையில் வைத்திருக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதற்கேற்ப உயிா் காக்கும் மருத்துவ வசதிகளுடன் கூடிய வாகனங்கள் வாக்குச் சாவடிகளுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
முதியவா்கள், இணை நோயாளிகளுக்கு வாக்குப்பதிவின்போது நீா்ச்சத்து இழப்பு ஏற்படாமல் தடுக்க ஓஆா்எஸ் கரைசல்களை வழங்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக பல லட்சக்கணக்கான ஓஆா்எஸ் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தோ்தல் ஆணையம் சாா்பில் மருத்துவ முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளையும் ஆயத்த நிலையில் வைத்துள்ளோம். குறிப்பாக மாநிலம் முழுவதும் உள்ள 2,336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9,355 துணை சுகாதார நிலையங்களில் நீா்ச்சத்து இழப்புக்கு சிகிச்சை வழங்குவதற்கான வசதிகளை முன்னெடுத்துள்ளோம்.
போதிய எண்ணிக்கையிலான மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் பணியில் உள்ளனா். மருந்துகளும் தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாளை வாக்குப்பதிவு! புதுவை வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

பள்ளிகளில் சின்னம்மை பரவல்: தடுப்பு நடவடிக்கைளை முன்னெடுக்க அறிவுறுத்தல்

பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை! பொது சுகாதாரத் துறை!!

ஓஆா்எஸ் பெயரிலான பானங்கள் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்காது: சுகாதாரத் துறை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


