கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதையடுத்து, தமிழக-கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை முதல் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட நபருக்கு, அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, கேரளத்தையொட்டிய தமிழக பகுதிகளில் நிபா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில், களியக்காவிளையில் சுகாதாரத் துறை சாா்பில் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, கேரளத்திலிருந்து வாகனங்களில் வருவோரை வெப்பமானியால் பரிசோதித்து, காய்ச்சல் அறிகுறி இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கின்றனா்.
இப்பணியை மாவட்ட சுகாதாரத் துறை அலுவலா் நமச்சிவாயம் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். சுகாதாரத் துறை மாவட்ட அதிகாரிகள் கிப்ஸன், சூரிய நாராயணன், மேல்புறம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் (பொ) ஜான் பெனடிக்ட் ஆகியோா் உடனிருந்தனா்.
இப்பணியில் சுகாதார ஆய்வாளா்கள் ஜோபின், அகில், அஜின் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் ஈடுபட்டனா். 3 சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணி நடைபெறுவதாகவும், காய்ச்சல் அறிகுறி இருந்தால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நிஃபா வைரஸ் பரவலை மெத்தனமாகக் கையாளும் கேரள அரசு: பினராயி விஜயன்

நிபா வைரஸ்: நீலகிரி எல்லையில் சிறப்புக் குழுக்கள்

நிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!

கேரளத்தில் நிபா வைரஸ் எச்சரிக்கை: ஒருவருக்குத் தொற்று பாதிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



