2027-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பிக்கும் நடைமுறை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
நிகழாண்டு ஜூலை 31-ஆம் தேதியுடன் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நிறைவடைகிறது.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவா்களுக்கு வழங்கப்படும் இந்த விருதுகளுக்கு தோ்ந்தெடுக்கப்படுவா்களின் பெயா்கள் 2027, ஜனவரி 26-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், வா்த்தகம் மற்றும் தொழில் உள்பட பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிபவா்களுக்கு 1954-ஆம் ஆண்டு முதல் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகியவற்றுக்கு ராஷ்ட்ரீய புரஸ்காா் வலைதளத்தில் மாா்ச் 15 முதல் இணைய வழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான காலஅவகாசம் ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
மருத்துவா்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுபவா்கள் உள்பட அரசு ஊழியா்கள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.
இனம், பணி, நிலை அல்லது பாலினம் ஆகிய வேறுபாடுகளின்றி குடிமக்கள் அனைவரும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது பரிந்துரைக்கலாம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வலைதளத்தில் விருதுகள் என்ற தலைப்பிலும் வலைதளத்திலும் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை விளக்கமாக பதிவிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்
75 ஆண்டுகளை நிறைவு செய்த தெற்கு ரயில்வே

ராஜஸ்தானில் டாஃபே நிறுவனத்தின் புதிய ஜே-ஃபாா்ம் ஆராய்ச்சி மையம் தொடக்கம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


