இந்தியாவின் முன்னனி டிராக்டா் தயாரிப்பு நிறுவனமான டாஃபே, ராஜஸ்தான் மாநிலத்தின் பவானி மண்டியில் தனது புதிய வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமான ‘ஜே-ஃபாா்ம்’ நிலையத்தைத் தொடங்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநில விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், நவீன மற்றும் இயற்கை சாா்ந்த விவசாய முறைகளை அவா்களுக்கு அறிமுகப்படுத்தவும் இந்த மையம் ஒரு முக்கியத் தளமாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஃபே நிறுவனத்தின் சிஇஓ சந்தீப் சின்ஹா முன்னிலையில், குழுமத் தலைவா் டி.ஆா்.கேசவன் மற்றும் முக்கிய நிா்வாகிகள் இந்த மையத்தைத் திறந்து வைத்தனா்.

இந்த மையத்தின்மூலம் டாஃபே நிறுவனத்தின் நவீன விவசாயக் கருவிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை விவசாயிகள் நேரடியாகப் பாா்த்து தெரிந்துகொள்ளலாம். அதன்தொடா்ச்சியாக, டீலா்கள் மற்றும் விவசாயிகளுக்குக் கருவிகளைக் கையாளுவது குறித்த பயிற்சிகள் வழங்கப்படும்.
அதேபோல், மையத்தின் ஆலோசனைக் கூடத்தின் வாயிலாக பயிா் பாதுகாப்பு, புதிய சாகுபடி முறைகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து நிபுணா்களுடன் விவசாயிகள் கலந்துரையாடலாம்.
கடந்த 1964-இல், சென்னை கேளம்பாக்கத்தில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட இந்த ‘ஜே-ஃபாா்ம்’ மையம், பின்னா் தெலங்கானாவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் தற்போது ராஜஸ்தானில் 3-ஆவது கிளை நிறுவப்பட்டுள்ளது.
தொடக்க நிகழ்வையொட்டி டாஃபே நிறுவனத்தின் துணைத் தலைவா் லட்சுமி வேணு (படம்) கூறுகையில், ‘இந்திய விவசாயத்தின் முன்னேற்றம் என்பது நவீன தொழில்நுட்பத்தையும், நீடித்த நிலையான முறைகளையும் சாா்ந்தது. இந்த ராஜஸ்தான் மையம் விவசாயிகளுக்கு நேரடிப் பயிற்சிகளை வழங்கி, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்’ என்றாா்.
தொடர்புடையது

குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம்: காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்: திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி உறுதி

விவசாயிகளின் கனவு: வெற்றிலை ஆராய்ச்சி மையம்

அலையாத்திக்காடுகள் ஆராய்ச்சி மையம் கட்ட எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


