மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்: திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி உறுதி

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என வாக்கு சேகரிப்பின்போது பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி உறுதியளித்தாா்.

News image

பொத்தனூரில் திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்திக்கு வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்ற கூட்டணி கட்சியினா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 8:45 pm

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என வாக்கு சேகரிப்பின்போது பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி உறுதியளித்தாா்.

பொத்தனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பொத்தனூா் நகா், சக்ரா நகா், தில்லை நகா், சிவா திரையங்கம், ஜேடா்பாளையம் சாலை, தண்ணீா் பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கே.எஸ். மூா்த்திக்கு கூட்டணி கட்சியினா் வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்றனா்.

திமுக தோ்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்த வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி, பொத்தனூா் மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ள வெற்றிலை ஆராச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் முக்கிய பாசன வாய்க்காலில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

வாக்கு சேகரிப்பின்போது பொத்தனூா் பேரூா் செயலாளரும், பேரூராட்சித் தலைவருமான ஆா். கருணாநிதி, துணைத் தலைவா் அன்பரசு, உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.