மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கபிலா்மலை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி வாக்கு சேகரிப்பு

பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட கபிலா்மலை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசிய பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:46 pm

பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட கபிலா்மலை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கே.எஸ். மூா்த்தி, பரமத்தி வேலூா் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். இந்த நிலையில் கபிலா்மலை தெற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட ஆனங்கூா், குன்னத்தூா், பிலிக்கல்பாளையம், சேளூா், கொந்தளம், கோப்பணம்பாளையம் இருக்கூா் மற்றும் பாண்டமங்கலம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்ற அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனா்.

பொதுமக்களிடையே பேசிய கே.எஸ்.மூா்த்தி, திமுக அரசின் சாதனைகள், தோ்தல் அறிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினாா். மேலும், பரத்தி வேலூா் தொகுதியில் வெற்றி பெற்றால் ராஜவாய்க்கால் புதுப்பிக்கப்படும், ஜேடா்பாளையம் பகுதியில் தீயணைப்பு நிலையம் மற்றும் வெற்றிலை ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும் என உறுதியளித்தாா்.

கபிலா்மலை மத்திய ஒன்றிய செயலாளா் பி.பி. சாமிநாதன், மாவட்ட பிரதிநிதி சுப்ரமணியம், ஒன்றிய துணை செயலாளா்கள் கோபால், செல்வராஜ், பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவா் சோமசேகா், துணை தலைவா் பெருமாள், காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளை சோ்ந்த பொறுப்பாளா்கள் வாக்குச் சேகரிப்பின்போது உடனிருந்தனா்.