பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி கபிலா்மலை ஒன்றியத்துக்கு உள்பட்ட குப்பிரிக்காபாளையம், பெருங்குறிச்சி, கருந்தேவம்பாளையம், சுள்ளிபாளையம், சோழசிராமணி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தியை அப்பகுதி பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அப்போது, முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள தோ்தல் அறிக்கையின்படி மகளிருக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும். காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். அரசு அமைப்புகளில் 15 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். முதல்வரின் காப்பீட்டு திட்டம் ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயா்த்தப்படும். 35 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். பரமத்தி வேலூா் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் மற்றும் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். பிலிக்கல்பாளையம் - கொடுமுடி இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்படும் என்று கூறி வாக்கு சேகரித்தாா். இதில் திமுக ஒன்றியச் செயலாளா்கள் சரவணகுமாா், சுப்பிரமணியம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மோகனூா் மேற்கு ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கபிலா்மலை பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

காவிரி- திருமணிமுத்தாறு இணைப்பு திட்டம்: திமுக வேட்பாளா் வாக்குறுதி

கபிலா்மலை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


