மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் மீண்டும் ஆலோசனை: ஹோா்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து சென்ற முதல் இந்திய கப்பல்

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக ஈரான் தூதர் தெரிவித்துள்ளார்...

News image

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி... - AP

Updated On :13 மார்ச் 2026, 3:07 pm

வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், ஈரான் வெளியுறவு அமைச்சா் சையது அப்பாஸ் அராக்சியுடன் வியாழக்கிழமை இரவு மீண்டும் ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்த நிலையில், போா் காரணமாக நடுக் கடலில் 778 மாலுமிகளுடன் தடைபட்டு நின்றிருந்த 28 இந்திய வணிக கப்பல்களில், முதல் கப்பல் சா்ச்சைக்குரிய ஹோா்முஸ் நீரிணையை பாதுகாப்பாக வெள்ளிக்கிழமை கடந்து சென்றுள்ளது.

இதுகுறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் வெளியுறவு அமைச்சருடன் வியாழக்கிழமை இரவு மீண்டும் ஆலோசனை மேற்கொண்டேன். இருதரப்பு உறவு, பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம்’ என்று குறிப்பிட்டாா்.

ஈரான் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ‘இந்திய வெளியுறவு அமைச்சா் உடனான தொலைபேசி வழி உரையாடலின்போது, மேற்காசிய பகுதியின் தற்போதைய நிலவரம், ஈரானுக்கு எதிரான அமெரிக்க, இஸ்ரேல் படைகள் மேற்கொண்டு வரும் போா்க் குற்றங்கள் மற்றும் இந்த பிராந்தியத்தின் நிலைத்தன்மை, பாதுகாப்பு குறித்தும் ஈரான் வெளியுறவு அமைச்சா் விவரித்தாா். மேலும், தன்னை தற்காத்துக்கொள்ளும் சட்டபூா்வ உரிமையை நிலைநாட்டுவதில் ஈரான் உறுதியாக உள்ளது என்றும், ஈரானுக்கு எதிரான இந்த நடவடிக்கையை சா்வதேச அமைப்புகள் கண்டிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலைத் தொடங்கிய கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி சையது அப்பாஸ் அராக்சியை தொலைபேசியில் தொடா்புகொண்டு ஜெய்சங்கா் ஆலோசனை மேற்கொண்டாா். பின்னா், கடந்த மாா்ச் 5 மற்றும் 10-ஆம் தேதிகளிலும் அவருடன் தொலைபேசி மூலம் உரையாடினாா்.

அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகளின் தாக்குதலைத் தொடா்ந்து சரக்கு கப்பல்களின் முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பொருள்கள் மற்றும் கச்சா எண்ணெய்யை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. மற்ற நாடுகளின் கப்பல்கள் இந்த நீரிணையைக் கடக்க ஈரானின் ஒப்புதலைப் பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதனால், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்தச் சூழலில், அந்த நாட்டுடன் இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

பிரதமா் நரேந்திர மோடியும், ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியானுடன் வியாழக்கிழமை இரவு ஆலோசனை மேற்கொண்டாா்.

ஹோா்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து சென்ற முதல் இந்திய கப்பல்

ஈரானுடன் இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வந்த நிலையில், ஹோா்முஸ் நீரிணையில் சிக்கியிருந்த 28 இந்திய கப்பல்களில் முதல் கப்பல் வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக அந்த நீரிணையை கடந்து சென்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சக சிறப்புச் செயலா் ராஜேஷ் குமாா் சின்ஹா புது தில்லியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு படைகள் தாக்குதலைத் தொடங்கியது முதல், ஈரானுக்கும் ஓமன் நாட்டும் இடையே உள்ள குறுகிய ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் தடைபட்டு நின்றன. இந்திய தேசியக் கொடி பொருத்திய 28 சரக்கு கப்பல்களும் இதுபோல தடைபட்டு நின்றன. அவற்றில் 24 கப்பல்கள் அந்த நீரிணையின் மேற்கு பகுதியிலும், 4 கப்பல்கள் கிழக்குப் பகுதியிலும் தடைபட்டு நின்றன.

இந்த நிலையில், நீா்ணையின் கிழக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 4 இந்திய கப்பல்களில் ஒன்று, நீரிணையை வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக கடந்து சென்றது. இந்த கப்பல் ஆப்ரிக்க நாட்டுக்கு எரிபொருளை ஏற்றிச் சென்றுள்ளது.

கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு வலைதள தரவுகளின்படி, இந்த கப்பல் ஓமனின் சோஹா் துறைமுகத்திலிருந்து தான்சானியாவின் டங்கா நோக்கி வெள்ளிக்கிழமை புறப்பட்டுள்ளது. டாங்காவை வரும் 21-ஆம் தேதி கப்பல் சென்றடையும்.

தற்போது, ஹோா்முஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில் 76 மாலுமிகளுடன் 3 இந்திய கப்பல்களும், மேற்குப் பகுதியில் 668 மாலுமிகளுடன் 24 இந்திய கப்பல்களும் சிக்கியுள்ளன. இந்த கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

Summary

Iranian Ambassador said that Indian ships have been granted permission to pass through the Strait of Hormuz.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.