மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை!

பிரான்ஸ் நாட்டுடன் தொடர்புடைய கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துள்ளது குறித்து...

News image

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸ் நிறுவனத்தின் கப்பல்... (கோப்புப் படம்) - AP

Updated On :3 ஏப்ரல் 2026, 11:53 am

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், சர்வதேச எண்ணெய் விநியோகத்தின் முக்கிய வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் கூட்டாளிகளுக்குச் சொந்தமான கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதியில்லை எனவும், அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், மால்டா நாட்டின் கொடியுடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சி.எம்.ஏ. சி.ஜி.எம். எனும் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று வெள்ளிக்கிழமை (ஏப். 3) அன்று ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து ஓமன் நாட்டுக்கு வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், போர் தொடங்கியது முதல் ஹோர்முஸ் நீரிணையை பிரான்ஸ் நாட்டுடன் தொடர்புடைய சரக்கு கப்பல் ஒன்று முதல்முறையாகக் கடந்துள்ளது.

இருப்பினும், இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டது முதல் அவ்வழியாகச் செல்லும் கப்பல்களின் போக்குவரத்து 90 சதவிகிதம் குறைந்துள்ளது.

முன்னதாக, ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க போர் விமானங்கள் பிரான்ஸின் வான்வழிப் பாதையைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான கப்பலை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான் அனுமதித்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.

Summary

It has been reported that a ship owned by a French company has successfully crossed the Strait of Hormuz.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.