மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஈரானில் இருந்து ஆர்மீனியா வந்த 170 இந்தியர்கள்! - மத்திய அரசு தகவல்!

ஈரானின் எல்லையைக் கடந்து இதுவரை 170 இந்தியர்கள் ஆர்மீனியா வந்தடைந்ததாகத் தகவல்...

News image

ஈரானிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் - (கோப்புப் படம்) PTI

Updated On :13 மார்ச் 2026, 1:35 pm

ஈரானின் எல்லையைக் கடந்து இதுவரை 170 இந்தியர்கள் ஆர்மீனியா வந்தடைந்துள்ளனர் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளிடையே பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இதையடுத்து, ஈரானில் சிக்கியுள்ள தங்களது குடிமக்களை மீட்கும் நடவடிக்கைகளில் பல்வேறு நாடுகளின் அரசுகளும் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், ஈரானின் எல்லையைக் கடந்து இதுவரை 170 இந்தியர்கள் ஆர்மீனியா நாட்டுக்கு வந்தடைந்துள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று (மார்ச் 13) தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“இன்று வரையில் ஈரானின் நிலம் வழியாக எல்லையைக் கடந்து இதுவரை 170 இந்தியர்கள் ஆர்மீனியா நாட்டுக்கு வந்தடைந்துள்ளனர். அவர்களில் சிலர் பத்திரமாக இந்தியா வந்துள்ளனர். மற்றவர்கள் அடுத்த சில நாள்களில் வரக்கூடும்” எனக் கூறியுள்ளார்.

இந்தியர்களை மீட்பதற்கான வெளியுறவு அமைச்சகம் பிரத்யேக கட்டுப்பாட்டு அறையைக்கு, 900 அழைப்புகள் மற்றும் 200 மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரானில் இருந்து ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் வழியாக இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான உதவிகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

170 Indians have so far arrived in Armenia after crossing the border from Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.