2024 ஆம் ஆண்டு முதல் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக 3,100 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, மத்திய வெளியுறவு இணையமைச்சர் பபித்ரா மார்கெரீட்டா வியாழக்கிழமை (மார்ச் 12) எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
“வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மனித உரிமை அமைப்புகள் வழங்கிய தரவுகளின்படி, 2024 ஆகஸ்ட் முதல் 2026 பிப்ரவரி வரையில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக 3,100 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இதில், சிறுபான்மையினரின் வீடுகள், கடைகள், வழிப்பாட்டுத் தலங்கள் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், தாக்குதல்காரர்கள் மீது வங்கதேச அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என இந்திய அரசு எதிர்பார்க்கிறது” எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்த விசாரணைகளுக்கு வங்கதேச அதிகாரிகளிடம் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு உதவ 24 மணிநேரமும் செயல்படக் கூடிய அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டதாகவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Summary
3,100 incidents of violence against minorities in Bangladesh since 2024.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரண் திமுக: முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஐபிஎல் தொடரை ஒளிபரப்ப எந்தத் தடையும் இல்லை: வங்கதேச அரசு

வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்!

வங்க தேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக 3,100 வன்முறை சம்பவங்கள்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


