ஈரான் நாட்டில் சிக்கியிருந்த இந்திய மீனவர்களை மீட்க உதவிய ஆர்மீனியா அரசுக்கு, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களால், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், பல்வேறு நாடுகளின் விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்கள் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாடுகளின் வழியாகவும், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வழியாகவும் தாயகம் திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரானில் சிக்கியிருந்த இந்திய மீனவர்கள் சனிக்கிழமை (ஏப். 4) அன்று ஆர்மீனியா வழியாகப் பத்திரமாக மீட்கப்பட்டதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால், மீனவர்களை மீட்க உதவிய ஆர்மீனியா அரசுக்கும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அராரத் மிர்சோயனுக்கும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரானில் இருந்து 996 பேர் ஆர்மீனியா வழியாகவும், 204 பேர் அஜர்பைஜான் வழியாகவும் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Jaishankar has expressed his gratitude to the Government of Armenia for its assistance in rescuing Indian fishermen stranded in Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானில் இருந்து மேலும் 312 இந்திய மீனவர்கள் மீட்பு! - மத்திய அரசு அறிவிப்பு!

ஈரானில் இருந்து ஆர்மீனியா, அஜர்பைஜான் வழியாக நாடு திரும்பிய 1,200 இந்தியர்கள்!
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள்... ஆர்மீனியாவுக்கு நன்றி: ஜெய்சங்கர்

ஆர்மீனியா வழியாக ஈரானில் இருந்து நாடு திரும்பும் 100 இந்திய மாணவர்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



