தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பிரதமர் மோடி நாளை அசாம் செல்கிறார்! ரூ.48,000 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

பிரதமர் மோடி நாளை அசாம் மாநிலத்துக்குச் செல்வது குறித்து...

News image

பிரதமர் நரேந்திர மோடி - ANI

Updated On :12 மார்ச் 2026, 2:59 pm

பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 13 அன்று அசாம் மாநிலத்துக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) 2 நாள் அரசு முறைப் பயணமாக அசாம் மாநிலத்துக்குச் செல்கிறார். மேலும், அசாமில் ரூ.48,000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நிகழாண்டில் அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், கோக்ரஜார், குவஹட்டி மற்றும் சில்சார் ஆகிய மாவட்டங்களில் ரூ.47,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.

இதையடுத்து, வரும் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் கோக்ரஜார் மாவட்டத்தில் ரூ.4,570 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கும், மாலை குவாஹட்டியில் ரூ. 19,680 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், வரும் மார்ச் 14 அன்று காலை 10.45 மணியளவில் சில்சார் மாவட்டத்தில் ரூ.23,550 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும், ரூ.3,200 கோடியில் அசாம் மாலா 3.0 சாலைத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் மூலம் அசாமில், காமாக்யா-சர்லபள்ளி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், குவஹட்டி-புதிய ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் மற்றும் நரங்கி-அகர்தலா எக்ஸ்பிரஸ் ஆகிய 3 முக்கிய ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கிவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Prime Minister Narendra Modi will visit Assam on March 13.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.