ராஜஸ்தானின் பச்சபத்ரா நகரத்தில் ரூ.80,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை வரும் மார்ச் 21 அன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்டோரா மாவட்டத்தில் உள்ள பச்சபத்ரா நகரத்தில் ரூ.80,000 கோடி மதிப்பீட்டில் புதிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஆலையின் மூலம் சுமார் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் எனவும், நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் திறப்பு விழா குறித்து ஆலோசனை மேற்கொள்ள ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தில்லி சென்றிருந்தார். பிரதமர் மோடி, பாஜக தலைவர் நிதின் நபீன் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை நேரில் சந்தித்து அவர் உரையாடினார்.
இந்த நிலையில், நாட்டின் முதல் ஒருங்கிணைந்த பெட்ரோகெமிக்கல் வளாகமாகக் கருதப்படும் பச்சபத்ரா சுத்திகரிப்பு ஆலையை வரும் ஏப்.21 அன்று பிரதமர் மோடி திறந்துவைப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அப்பகுதி முழுவதும் சாலை, குடிநீர், போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Summary
PM Modi will inaugurate the ₹80,000 crore oil refinery, in the city of Pachpadra on March 21.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் விதிகளுக்கு மத்தியில் பிரதமர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மோடி: கார்கே கடும் தாக்கு
அரசியலில் அதிகளவிலான பெண்கள் நுழைய வேண்டும்: பிரதமர் மோடி
மார்ச் 31-ல் குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி! ரூ.5,295 கோடி வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

தீக்கிரையான அமெரிக்க வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! தாக்குதல் நடத்தப்பட்டதா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


