தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு கருத்து: இளைஞர் மீது வழக்குப் பதிவு!

சமூக ஊடகத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து பற்றி..

News image

சமூக ஊடகங்கள் - DPS

Updated On :7 மார்ச் 2026, 6:56 am

கேரளத்தின் கண்ணூரில் உள்ள ஸ்ரீகண்டபுரத்தில சமூக ஊடகத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு கருத்து பதிவிட்டுள்ளதாக கேரள இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

பாஜக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை கோட்டூரைச் சேர்ந்த ராஜன் சி. கோட்டூர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எஃப்.ஐ.ஆரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மார்ச் 3-ஆம் தேதி முகநூல் பதிவில் பிரதமர் மோடியை "துரோகி" என கருத்து பதிவிட்டுள்ளதாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. பிரதமரை குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாகவும், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டதாகவும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.

கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கருத்துகளைப் பதிவிட்டதற்காகக் கேரள காவல் சட்டத்தின் பிரிவு 120(o) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை விசாரணை தொடங்கியதாக போலீஸார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் விசாரிக்கப்படுவார், மேலும் கருத்தை இடுகையிட பயன்படுத்தப்பட்ட மின்னணு சாதனம் விசாரணையின் ஒரு பகுதியாகக் கண்டறியப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Summary

A case has been registered against a man for allegedly calling Prime Minister Narendra Modi a "traitor" on a social media post at Sreekandapuram here, police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.