தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

5-ம் நாளாக தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

News image

தங்கம் - கோப்புப்படம்

Updated On :6 மார்ச் 2026, 5:14 am

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் போர்ப் பதற்றம் நிலவி வருவதை அடுத்து தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐந்தாவது நாளாக இன்றும்(மார்ச் 6) தங்கம் விலை குறைந்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த மாா்ச் 2ல் சவரனுக்கு ரூ. 920, மாா்ச் 3ல் சவரனுக்கு ரூ. 1,560, மார்ச் 4 -இல் சவரனுக்கு ரூ. 2,120, மார்ச் 5-ல் சவரனுக்கு ரூ. 640 குறைந்தது.

இந்த நிலையில், இன்று(மார்ச் 6, வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ. 160 குறைந்து ரூ.14,960-க்கும் சவரனுக்கு ரூ. 1,280 குறைந்து ரூ. 1,19,680-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 5 நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 6,520 குறைந்துள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 290-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.90 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Today gold and silver rate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.