பிரதமர் நரேந்திர மோடி எந்தவொரு பிரச்னைக்கும் ராணுவ மோதல் தீர்வல்ல எனக் கூறியுள்ளார்.
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்த பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் புவிசார் அரசியல் மாநாடான ரெய்சினா டயலாக் மாநாட்டின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்பை சந்தித்த மோடி, “இந்தியா மற்றும் பின்லாந்து ஆகிய இரண்டு நாடும் சட்டம், பேச்சுவார்த்தையில்தான் நம்பிக்கை கொண்டுள்ளது. எந்தவொரு பிரச்னைக்கும் ராணுவ மோதல் தீர்வாகாது என்பதில் இரண்டு நாடுமே உடன்படுகிறோம்.
மேற்கு ஆசியாவிலோ அல்லது உக்ரைனிலோ எங்கு மோதல்கள் நிகழ்ந்தாலும் அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவர இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும். மேலும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வேரறுப்பது எங்களின் நிலைப்பாடு ஆகும்.” எனத் தெரிவித்தார்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப். 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தெஹ்ரான் உள்ளிட்ட பல நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், ஈரானில் இதுவரை 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், போர் குறித்தும், பயங்கரவாதம் குறித்தும் பிரதமர் மோடி பேசியது கவனம் பெற்றுள்ளது. மேலும், இந்த ரெய்சினா டயலாக் 2026 என்னும் மாநாடு மார்ச் 5 முதல் மார்ச் 7 வரை மொத்தம் 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
Summary
Military conflict is not the solution to the problem - Prime Minister Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


