மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சமூக ரீதியாக பின்தங்கியுள்ளது குஜராத்: ஜான் பிரிட்டாஸ்

கல்விச் சிந்தனை அரங்கில் ஜான் பிரிட்டாஸ் பேசியது குறித்து...

News image

ஜான் பிரிட்டாஸ்

Updated On :2 மார்ச் 2026, 1:27 pm

மத்திய அரசின் திட்டங்கள் மாநிலங்களில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., ஜான் பிரிட்டாஸ் தெரிவித்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கலந்துகொண்டார்.

இதில், கல்வியில் இடதுசாரி அல்லது வலதுசாரி சித்தாந்தம் என்ற தலைப்பில் ஜான் பிரிட்டாஸ் பேசியதாவது:

''முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட 5 துறைகளில் மைல்கல் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இவை இடதுசாரிகளின் அழுத்தத்தால் நடந்துள்ளது.

கேரளத்தையும் மாநிலங்களையும் ஒப்பிட விரும்பினால், சமூக நிலையில் அடைந்துள்ள சாதனைகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன். குஜராத் ஒரு வளமான மாநிலமாக அறியப்படுகிறது. ஆனால், சமூகரீதியாக அந்த மாநிலம் பின்தங்கியுள்ளது.

குஜராத்தில் பள்ளி இடைநிற்றல் அதிகம். கடந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இடைநிற்றல் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சம் 15 ஆயிரமாக இருக்கும். கேரளத்தில் 7 ஆயிரத்து 500 ஆக உள்ளது. இந்த வித்தியாசத்திற்கும் மக்கள் தொகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. குஜராத்தை விட சென்னையில் மக்கள்தொகை அதிகம்.

குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் அமெரிக்காவுக்கு ஒரு படி முன்னோடியாக உள்ளது கேரளம். டபுள் என்ஜின் மாநிலமான உத்தரப் பிரதேசத்தை விட சுகாதாரத்தில் கேரளம் மேம்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் (விபி ஜி ராம் ஜி), பிஎம் ஸ்ரீ பள்ளி போன்ற மத்திய அரசின் திட்டங்கள் பெரிதாக மாநிலங்களின் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. கேரளத்தில் உள்ள பள்ளிகள் உலக தரத்திலான பள்ளிகளுடன் போட்டியிடும் தகுதியை ஏற்கெனவே கொண்டுள்ளது.

தொழில் முதலீடுகளைக் காட்டிலும் கல்வியிலும் சுகாதாரத்திலும் அதிக அளவிலான முதலீடுகளை கேரள அரசு செய்து வருகிறது'' எனக் குறிப்பிட்டார்

Summary

ThinkEdu conclave 2026 CPI-M MP John Brittas

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.