இயற்கையை பராமரிப்பதில் உள்ளூர் மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது என தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு கலந்துகொண்டார்.
இதில், பூமியை வென்றெடுத்தல் : எதிர்காலத்தைக் காப்பாற்றுதல் என்ற தலைப்பில் சுப்ரியா சாஹு கலந்துகொண்டு பேசியதாவது:
''எந்தவொரு வளர்ச்சியின் அடிப்படையும் மேம்படும் நிலைத்தன்மையில் வேரூன்றியிருக்க வேண்டும்.
நீங்கள் உண்மையிலேயே ஒரு சக்திவாய்ந்த நாடாக இருக்க விரும்பினால், சக்தி வாய்ந்த டிரில்லியன் பொருளாதார நாடாக இருக்க விரும்பினால், பல்லுயிர் பெருக்கம் மற்றும் காலநிலை மாற்றத்தில் வலுவான அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
உள்ளூர் மக்களின் மனநிலையை என் ஆராய்ச்சிக் குழுவினர் துல்லியமாகக் கண்டறியும் திறமை உடையவர்கள். மாங்குரோவ் காடுகளின் பராமரிப்பில் உள்ளூர் மக்களின் கருத்துகள், ஆலோசனைகள் மிகவும் முக்கியமானது.
மீன்களின் எலும்புகளைப் போன்று மாங்குரோவ் காடுகளின் தன்மை உள்ளது. இது இயற்கையின் அதிசயம். உள்ளூர் மக்களின் உள்ளீடுகளை மாங்குரோவ் காடுகளில் தமிழக வனத் துறை செயல்படுத்தியுள்ளது. இது குறிப்பிடத்தகுந்த வெற்றியையும் அளித்துள்ளது'' எனப் பேசினார்.
Summary
ThinkEdu Conclave 2026 Supriya Sahu Additional Chief Secretary
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு நிறைவு!

ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் புதிய எழுச்சி: பழனிவேல் தியாகராஜன்

மூன்றாவது மொழிக்கான கட்டாயம் இல்லை: கனிமொழி சோமு
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

