மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மூன்றாவது மொழிக்கான கட்டாயம் இல்லை: கனிமொழி சோமு

கல்விச் சிந்தனை அரங்கில் கனிமொழி சோமு பேசியது குறித்து...

News image

கல்விச் சிந்தனை அரங்கில் கனிமொழி சோமு

Updated On :3 மார்ச் 2026, 7:49 am

தமிழ்நாட்டில் மூன்றாவது மொழிக்கான கட்டாயம் ஏற்படவில்லை என திமுக எம்.பி. கனிமொழி சோமு தெரிவித்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாவது நாளில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், திமுக எம்.பி., கனிமொழி சோமு கலந்துகொண்டனர். இந்த விவாத நிகழ்வை தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் ஒருங்கிணைத்தார்.

இதில், இளைஞர்களை மேம்படுத்துதல் : இந்தியாவின் அரசியல் மாற்றம் என்ற தலைப்பில் கனிமொழி சோமு பேசியதாவது:

''திமுகவின் முதுகெலும்பாக இளைஞர் அணி உள்ளது. அறிஞர் அண்ணாவில் இருந்து தற்போது உள்ள தலைவர்கள் பலரும் அதில் இருந்து வந்தவர்கள்தான்.

தாய் மொழியில் பேசுகிறோம். மற்றவர்களுக்கு கருத்துகளைப் பரிமாற ஆங்கிலம் பேசுகிறோம். அது தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கருத்துகளைப் பரிமாற உதவுகிறது. ஹிந்தி அறிந்துகொள்வதற்கான தேவை என்ன? மூன்றாவது மொழிக்கான கட்டாயம் ஏற்படவில்லை.

கல்விக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆன்லைனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களே பயனர்களாக உள்ளனர். இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளம் தலைமுறையினர் அரசியலுக்கு வர விரும்புகின்றனர். அரசு அதிகாரிகளாக இருந்து சேவையாற்றவும் விரும்புகின்றனர். ஆனால், சமூக வலைதளப் பயன்பாடு சில இளைஞர்களை சீரழிக்கிறது. சிலர் நேர்மறையாக பயன்படுத்தினாலும், சிலர் சமூக வலைதளங்கள் மூலம் தவறான வழிகளில் செல்வதை மறுக்க முடியாது.

அரசியல் எளிதானது அல்ல. இன்று போட்டியிட்டு நாளை வெற்றி பெற முடியாது. அதற்கு துடிப்பான நோக்கமும் அயராத உழைப்பும் இளைஞர்களுக்கு அவசியமானது '' என கனிமொழி சோமு பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.