சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற கல்விச் சிந்தனை அரங்கு 2026 நிறைவடைந்தது.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் இருநாள்கள் (மார்ச் 2, 3) நடைபெற்ற இந்த அரங்கில், நாடு தழுவிய அளவிலான அரசியல் தலைவர்களும் அறிஞர்களும் கல்வியாளர்களும் பங்கேற்றுப் பேசினர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி குத்துவிளக்கு ஏற்றி திங்கள்கிழமை (மார்ச் 2) கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
இரு நாள்கள் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்வுகளில், பிகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், தமிழ்நாடு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ், தெலங்கானா அமைச்சர் ஸ்ரீதர் பாபு, கர்நாடக உயர்கல்வி அமைச்சர் எம்.சி. சுதாகர், காங்கிரஸ் எம்பி சசி தரூர், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக எம்பி கனிமொழி சோமு, குஷ்பு சுந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றினர்.
கருத்தரங்கின் நிறைவாக பிகார் பாஜக எம்.எல்.ஏ. மைதிலி தாகூரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி லட்சுமி மேனன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியா் சந்த்வானா பட்டாச்சாா்யா, தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள் பங்கேற்றனர்.
Summary
The New Indian Express Thinkedu conclave 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜெயகோவிந்த் ஹரிகோபால் அகா்வால் அகா்சன் கல்லூரி வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ்குமாா் சொந்தாலியா!

சமூக ரீதியாக பின்தங்கியுள்ளது குஜராத்: ஜான் பிரிட்டாஸ்
பத்திரிகை துறையில் அச்சமின்றி செயல்பட்ட ராம்நாத் கோயங்கா! ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

