பத்திரிகை துறையில் எந்தவித அச்சமுமின்றி செயல்பட்டவர் ராம்நாத் கோயங்கா என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம் சூட்டினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ஐ தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொடக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார்.
நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதாவது:
''தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரைக் கேட்டதுமே நமது மனதில் தோன்றும் பெயர் ராம்நாத் கோயங்கா. அவர் பத்திரிகை துறையில் அச்சமின்றி செயல்பட்டவர். உண்மையின் பக்கம் நின்று கேள்விகளை எழுப்பியவர்.
உயா் கல்வி சோ்க்கை விகிதத்தில் தமிழகம் 50 சதவீதத்தை எட்டியுள்ளது. அதாவது 2035-ஆம் ஆண்டின் இலக்கை தற்போதே எட்டியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், உண்மையில் தமிழக கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வியின் தரம் அதிகரிக்கப்பட வேண்டும். ஆசிரியா்களின் தரமும் மேம்பட வேண்டும் என்றாா் ஆளுநா்.
Summary
Governor of Tamil Nadu R. N. Ravi about Ramnath Goenka
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு நிறைவு!
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

